Advertisment

முதல் முறையாக இணைந்த அதர்வா - அதிதி

atharvaa aditi shankar movie update

அதர்வா நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் மத்தகம் வெப் தொடர் வெளியானது. இதையடுத்து அதன் இரண்டாம் பாகம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியானது. இதனிடையே அட்ரஸ், தணல், நிறங்கள் மூன்று உள்ளிட்ட படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இப்போது நெல்சன் வெங்கடேசன் இயக்கும் 'டிஎன்ஏ' படத்தில் நடிக்கிறார். இந்த நிலையில், அதர்வா நடிக்கும் புதுப் பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. எம். ராஜேஷ் இயக்கும் புதுப் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். ஸ்ரீவாரி பிலிம் சார்பில் பி. ரங்கநாதன் தயாரிக்கும் இப்படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.

Advertisment

படம் குறித்து நடிகர் அதர்வா முரளி கூறும்போது, ​​“திரையுலகில் மிகுந்த அனுபவம் கொண்ட பி. ரங்கநாதன் சார் போன்ற சிறந்த தயாரிப்பாளருடன் இணைந்து பணியாற்றுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். தரமான பொழுதுபோக்கு கதைகளைத் தேர்ந்தெடுப்பதிலும்ஊக்குவிப்பதிலும்அதற்காக செலவு செய்வதிலும் அவருடைய ஈடுபாடு அபாரமானது. இயக்குநர் ராஜேஷின் திரைக்கதைக்கு இவர் தயாரிப்பு செய்து அதில் நான் நடிப்பது பெருமையான விஷயம். முழுக்க முழுக்க எண்டர்டெய்ன்மெண்ட் படங்களை எதிர்பார்த்து திரையரங்குகளுக்கு வருபவர்களை இந்தப் படம் நிச்சயம் ஏமாற்றாது" என்றார்.

Advertisment

இயக்குநர் எம். ராஜேஷ் கூறும்போது, ​​“காலத்திற்கு ஏற்றாற்போல, சினிமாவின் ஒவ்வொரு ஜானரிலும் மாற்றம் ஏற்படும்.இருப்பினும், தமிழ் சினிமா ரசிகர்கள் எண்டர்டெயினர் படங்களை ஒருபோதும் கொண்டாடத் தவறியதில்லை. பார்வையாளர்கள் திரையரங்குகளில் அவர்களை மகிழ்விக்கும் இதுபோன்றத் தருணங்களை என் படங்களில் கொடுக்க எனக்கு இடம் கொடுத்ததை நான் பாக்கியமாக கருதுகிறேன்" என்றார்.

aditi shankar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe