/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/25_18.jpg)
கடந்த 2017ஆம் ஆண்டு நானி நடிப்பில் வெளியான 'நின்னு கோரி' என்ற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக், 'தள்ளிப் போகாதே' என்ற பெயரில் உருவாகி வருகிறது. இப்படத்தை இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்க, அதர்வா நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.
இந்த வருட ஜனவரி மாதம் வெளியாகவிருந்த இப்படம், பல்வேறு காரணங்களால் தள்ளிப்போனது. இந்த நிலையில், படத்தின் சென்சார் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள், படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கியுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
தற்போது கரோனா இரண்டாம் அலை காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், இயல்புநிலை திரும்பிய பிறகு இப்படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)