மீண்டும் தள்ளிப்போகும் 'தள்ளிபோகாதே'!

atharva

கடந்த 2017ஆம் ஆண்டு நானி நடிப்பில் வெளியான 'நின்னு கோரி' என்ற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக், 'தள்ளிப் போகாதே' என்ற பெயரில் உருவாகியுள்ளது. இப்படத்தை ஆர்.கண்ணன் இயக்க, அதர்வா நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்ய, கோபி சுந்தர் இசையமைத்துள்ளார்.

alt="ad " data-align="center" data-entity-type="file" data-entity-uuid="c3b97bfd-907d-494c-b5c1-e573b47ebd56" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/udanpirappe-article-inside-500x300_51.jpg" />

இப்படத்தின் பணிகள் கடந்த ஆண்டே நிறைவடைந்த நிலையில், படத்தை வெளியிட பல்வேறு கட்டங்களில் படக்குழு முயற்சித்துவந்தது. ஒவ்வொரு முறை ரிலீஸ் தேதி நெருங்கும்போதும் நிதி பிரச்சனை உட்பட பல காரணங்களால் படத்தின் ரிலீஸில் இருந்து படக்குழு பின்வாங்க நேரிட்டது. ஒரு வழியாக அனைத்து பிரச்சனைகளையும் தற்போது நிறைவுசெய்துள்ள படக்குழு, ஆயுதபூஜை தினமான அக்டோபர் 14ஆம் தேதி 'தள்ளிப்போகாதே' திரைப்படம் வெளியாகும் என சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்த நிலையில், தற்போது மீண்டும் ரிலீஸில் சிக்கல் எழுந்துள்ளது. ஏற்கனவே வெளியான டாக்டர் திரைப்படத்திற்கு கிடைத்துள்ள நல்ல வரவேற்பு மற்றும் நாளை வெளியாகவுள்ள அரண்மனை 3 படத்திற்கு கிடைத்த திரையரங்குகள் எண்ணிக்கை ஆகியவற்றை கவனத்தில் எடுத்த படக்குழு, படத்தின் ரிலீஸில் இருந்து பின்வாங்கியுள்ளது. இதனால் 'தள்ளிப்போகாதே' படத்தின் ரிலீஸை எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு இந்த முறையும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

இதையும் படியுங்கள்
Subscribe