Advertisment

சூப்பர் ஹிட் படத்தை ரீமேக் செய்யும் அதர்வா!!!

100 படத்தை தொடர்ந்து அதர்வா இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமம் புகழ் அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். தமிழில் அனுபமா நடிக்கும் இரண்டாவது படம் இது ஆகும்.

Advertisment

atharva

குடும்பம் மற்றும் உறவுகளை மையப்படுத்தி இப்படம் உருவாகுகிறது. இன்னும் இந்த படத்திற்கு பெயரிடப்படவில்லை. அதர்வா பிஎச்.டி பட்டதாரியாகவும், அனுபமா பரதநாட்டிய டான்சராகவும் நடிக்கிறார்கள்.

இந்த படம் தெலுங்கில் வெற்றிகரமாக ஓடிய நின்னுக்கோரி படத்தின் ரீமேக். தெலுங்கில் நானியும், நிவேதா தாமஸும் நடித்திருப்பார்கள்.

Advertisment

அதர்வா நடித்திவரும் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் இறுதியில் தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பை விரைவில் தொடங்க இருக்கிறார்கள்.

adharva anupama
இதையும் படியுங்கள்
Subscribe