atharva

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான மிஷ்கின் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘சைக்கோ'. இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. இப்படத்தைத் தொடர்ந்து, கடந்த 2016ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற ‘பிசாசு’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கிவருகிறார் மிஷ்கின். இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பானது தற்போது முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது.

Advertisment

இந்த நிலையில், மிஷ்கினின் அடுத்த படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தன்னுடைய அடுத்த படத்தில் நடிகர் அதர்வாவை நாயகனாக வைத்து மிஷ்கின் படம் இயக்கவுள்ளாராம். ‘பிசாசு’ படத்தின் இரண்டாம் பாகத்தை நிறைவு செய்துவிட்டு இந்தப் படத்தை மிஷ்கின் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisment

நடிகர் அதர்வா நடிப்பில் உருவாகிரிலீசிற்குத் தயாராகவுள்ள ‘குருதி ஆட்டம்’, ‘தள்ளிப் போகாதே’ ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவுள்ளன.