Advertisment

பூமராங் படத்தில் விட்டதை இந்த படத்தில் பிடிக்கும் முனைப்பில் அதர்வா

எம்.கே.ஆர்.பி புரொடக்ஷன்ஸுடன் இணைந்து மசாலா பிக்ஸ் தயாரித்து, அதர்வா முரளி - அனுபமா பரமேஸ்வரன் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது. சென்னையில் தொடர்ந்து 15 நாட்கள் நடக்கும் படப்பிடிப்பு பிறகு வெளிநாடுகளில் படமாக்கபட உள்ளது. பூமராங்க படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக அதர்வாவுடன் இணைந்துள்ள இயக்குனர் கண்ணன் இப்படம் குறித்து பேசும்போது....

Advertisment

atharva

"அதர்வா மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் முதல் முறையாக ஜோடி சேர்ந்திருக்கிறார்கள், இந்த ஜோடி திரையில் நிறைய புத்துணர்ச்சியை தரும். அவர்கள் இருவரும் நிச்சயமாக பார்வையாளர்களை அவர்களின் உணர்வு வெளிப்பாடு மற்றும் அழகான செய்கைகளால் ரசிக்க வைப்பார்கள். ரொமான்டிக் படங்களுக்கு என்றே எப்போதும் ஒரு குறிப்பிட்ட பார்வையாளர்கள் உள்ளனர். இந்த ஆண்டின் கடைசி கட்டத்தில் வெளியிடப்படவுள்ள இந்த பெயரிடப்படாத படம் அனைவராலும் ரசிக்கப்படும், குறிப்பாக குடும்பங்கள் இந்த படத்தை ரசிப்பார்கள்" என்றார். கண்ணன் அதர்வா கூட்டணியில் உருவான பூமராங் படம் போதிய வரவேற்பு பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

anupama parameshwaran atharvaa
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe