maniyarfamily

Advertisment

atharva

கடந்த வருடம் வெளி ஆன படங்களில் பெரிதும் பாராட்ட பட்ட '8 தோட்டாக்கள்' படத்தின் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் உருவாகும் படம் 'குருதி ஆட்டம்'. அதர்வா நாயகனாக நடிக்கும் இப்படத்தை ராக் போர்ட் என்டேர்டைன்மெண்ட் சார்பில் டி முருகானந்தம் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் ஐ பி கார்த்திகேயன் இணைந்து தயாரிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் பூஜை எளிமையான முறையில் நடந்தது. அப்போது இப்படம் குறித்து இயக்குனர் ஸ்ரீ கணேஷ் பேசியபோது.... "இந்த படம் முழுக்க, முழுக்க மதுரை மாநகரின் பின்னணியில் உருவாகும் படமாகும். கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் படம் இது. ஒரு வெற்றி படத்துக்கு உரிய அத்தனை அம்சங்களும் இந்த படத்தில் இருக்கும். நாளுக்கு நாள் தன்னுடைய கதாநாயகன் அந்தஸ்த்தை உயர்த்தும் அதர்வா இந்த படத்தின் கதாநாயகன், அவருடைய முழு திறமைக்கும் தீனி போடும் படமாக 'குருதி ஆட்டம்' அமையும். கதாநாயகி தேர்வு நடைப் பெற்று கொண்டு இருக்கிறது. இந்த மாதத்தின் இறுதியில் படப்பிடிப்பு துவங்கும" என்றார்.