Advertisment

தமிழ் சினிமாவில் புதுமையான மேக்கிங்; அஸ்வின்ஸ் பட அனுபவம் பகிரும் விமலா ராமன்

Asvins Press Meet - Vimala Raman

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ராவின் பிரசாத் தயாரித்திருக்க, பாபிநீடு வழங்கும் அறிமுக இயக்குநர் தருண் தேஜா இயக்கத்தில் வசந்த் ரவி நடித்திருக்கும் ‘அஸ்வின்ஸ்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது.

Advertisment

நிகழ்வில் கலந்து கொண்டு விமலா ராமன் பேசியதாவது, “இயக்குநர் தருணுடைய கனவை அனைவரும் நிறைவேற்றியுள்ளதற்கு வாழ்த்துகள்.லாக்டவுன்சமயத்தில் தருணுடைய ஒரு ஷார்ட் ஃபிலிம் பார்த்தபோதே எனக்கு பிடித்திருந்தது. ஒரு இயக்குநருக்கு என்ன தகுதி வேண்டுமோ அவை அனைத்தும் தருணுக்கு இருந்தது. இந்த ப்ராஜெக்ட்டில் நானும் ஒரு அங்கம் என்பது மகிழ்ச்சியான ஒன்று.

Advertisment

வசந்த், சரஸ், முரளி, உதய் என நாங்கள் அனைவரும் குடும்பமாக வேலை பார்த்தோம். விஜய் சித்தார்த்தின் இசை எனக்கு பிடித்திருந்தது. சரியான இசையைக் கொடுத்துள்ளார். லண்டனில் நாங்கள் மைனஸ் 4 டிகிரி குளிரில் படமாக்கினோம். யாருமே முகம் சுழிக்காமல் நடித்துக் கொடுத்தனர். தமிழ் சினிமாவுக்கு வேறு விதமான மேக்கிங்கை காட்ட வேண்டும் என்ற எண்ணம் எங்கள் அனைவருக்குமே இருந்தது. இதை சாத்தியமாக்கிய பாபி சார், சக்தி சாருக்கு நன்றி. உங்கள் ஆதரவை எதிர்பார்த்து இருக்கிறோம்” என்றார்.

Vimala Raman PRESS MEET
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe