Skip to main content

அசுரன் ட்ரைலர் எப்போது ...அப்டேட் விட்ட தனுஷ்! ரசிகர்கள் மகிழ்ச்சி...

Published on 06/09/2019 | Edited on 06/09/2019

வெற்றிமாறன் - தனுஷ் ஆகிய இருவரும் அசுரன் படத்தின் மூலம் நான்காவது முறையாக கூட்டணி சேருகின்றனர். இப்படத்தின் படபிடிப்பு வடசென்னை படம் வெளியான ஒரு வாரத்திலேயே தொடங்கப்பட்டுவிட்டது. அதனை அடுத்து விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது முடிவடைந்து ரிலீஸுக்கு தயராக இருக்கிறது.
 

asuran

 

 

கலைப்புலி.எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் சார்பில் உருவாகி வரும் இப்படத்தில் தனுஷ் அப்பாவாக நடிக்கிறார். பூமணி எழுத்தில் வெளியான வெக்கை நாவலை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்படுகிறது. மலையாள சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் மஞ்சு வாரியர்தான் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படம்தான் மஞ்சு வாரியருக்கு முதல் படம்.
 
அக்டோபர் 4ஆம் தேதி இப்படம் ரிலீஸாகிறது என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அண்மையில்  சென்னையில் நடைபெற்றது.
 

mahamuni


இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் விரைவில் வெளியாகக்கூடும் என்று இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இன்று ட்விட்டரில் தெரிவித்திருந்தார். தற்போது தனுஷ் வருகிற 8ஆம் தேதி படத்தின் ட்ரைலர் வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

அசுரன் தெலுங்கு ரீமேக்கின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Published on 12/07/2021 | Edited on 12/07/2021

 

asuran

 

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், பசுபதி, கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான படம் 'அசுரன்'. தமிழில் இப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது. தெலுங்கு ரீமேக்கை சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் தாணு இருவரும் இணைந்து தயாரித்தனர். தமிழில் தனுஷ் நடித்த கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் நடிக்க, மஞ்சுவாரியார் கதாபாத்திரத்தில் ப்ரியாமணி நடித்தார். இப்படத்திற்கு தெலுங்கில் 'நாராப்பா' எனப் பெயரிடப்பட்டது.

 

இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து ரிலீஸிற்கு தயாரான வேளையில், கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் படத்தை திட்டமிட்டபடி ரிலீஸ் செய்வதில் சிக்கல் எழுந்தது. இந்த நிலையில், 'நாராப்பா' படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட முடிவெடுத்த தயாரிப்பு தரப்பு, சில முன்னணி ஓடிடி நிறுவனங்களிடம் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியது. இதில், அமேசான் நிறுவனத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எட்டப்பட்டது. இதனையடுத்து, நாராப்பா படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை அமேசான் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி, நாராப்பா திரைப்படம் அமேசான் தளத்தில் வரும் ஜூலை 20ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

 

அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கான நாராப்பா ரிலீஸ் தெலுங்கு ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Next Story

கோல்டன் குளோப் விருது விழாவிற்கு இரு தமிழ்ப்படங்கள் தேர்வு!

Published on 21/12/2020 | Edited on 21/12/2020

 

golden globe

 

ஆஸ்கார் விருதிற்கு அடுத்தபடியாக, உலகத் திரையுலகினரால் பெரிதும் மதிக்கப்படக்கூடிய மற்றும் கௌரவமாகக் கருதக்கூடிய விருது கோல்டன் குளோப் விருது ஆகும். இவ்விருது விழாவானது வருடந்தோறும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறுவது வழக்கம். ஆங்கில படங்கள் மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள பிற மொழிப்படங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு இதில் திரையிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அடுத்த வருடம் ஃபிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள 78-வது கோல்டன் குளோப் விருது விழாவிற்கு, இரு தமிழ்ப்படங்கள் தேர்வாகியுள்ளன.

 

அவை, இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படமும் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படமும் ஆகும். இதனையடுத்து, உற்சாகமான இவ்விரு நடிகர்களின் ரசிகர்கள், தங்களது மகிழ்ச்சியை சமுக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.   

 

உலகம் முழுவதிலும் இருந்து வந்த 127 படங்களில் இருந்து 50 திரைப்படங்களை நடுவர்கள் குழு திரையிடுதலுக்குத் தேர்ந்தெடுத்துள்ளது. திரையரங்கில் வெளியாகும் படங்கள் மட்டுமே இவ்விருதுவிழாவில் பங்கேற்க முடியும் என்ற விதியானது, கரோனா நெருக்கடி நிலை காரணமாக, ஓடிடி-யில் வெளியாகும் படங்களும் பங்கேற்கலாம் என மாற்றி அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.