தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் உருவான 'அசுரன்' படம் விமர்சனரீதியாக மாபெரும் வெற்றிபெற்று வசூலிலும் பட்டையைக் கிளப்பியது. 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிய இப்படம் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

Advertisment

grg

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இதையடுத்து இப்படம் தெலுங்கில் 'நாரப்பா' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு தனுஷ் வேடத்தில் வெங்கடேஷும், மஞ்சு வாரியர் வேடத்தில் பிரியாமணியும் நடிக்கிறார்கள். இந்நிலையில் தற்போது அசுரன் படம் கன்னடத்திலும் ரீமேக் ஆகவுள்ளது. இதில் தனுஷ் நடித்த கதாபாத்திரத்தில் கன்னட சூப்பர்ஸ்டார் சிவ ராஜ்குமார் நடிக்கவுள்ளார். ஹீரோயின் இன்னும் முடிவாகாத நிலையில் இப்படத்தை ஜேக்கப் வர்கீஸ் இயக்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.