தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் உருவான 'வடசென்னை' படம் சென்ற ஆண்டு வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் ஆரம்பமாகவுள்ளதாக முன்னர் அறிவித்திருந்தனர்.

Advertisment

asuran

பின்னர் திடீரென வடசென்னை 2 படத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக படக்குழு அறிவித்தது. இதையடுத்து மீண்டும் தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் 'அசுரன்' படம் உருவாகவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் நாயகியாக மலையாள நடிகை மஞ்சு வாரியார் நடித்து வந்தார். இப்படத்தின் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி வரும் அக்டோபர் 4ஆம் தேதி 'அசுரன்' படம் உலகமெங்கும் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.