மலையாளசினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் மஞ்சு வாரியர். சமீபத்தில்கூட தமிழில் இவர் முதன் முறையாக நடித்த அசுரன் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/manju-warrier_0.jpg)
இவர் மலையாள சினிமா தயாரிப்பாளரும், இயக்குநருமான ஸ்ரீகுமார் மேனன் மீது திருவனந்தபுரம் போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், “இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் சமூகவலைதளங்களில் என் புகழுக்கு அவப்பெயர் ஏற்படுத்தி வருவதுடன், அவரால் என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஸ்ரீகுமார் மேனன் திரைப்படத்தின் தயாரிப்பு மற்றும் ரிலீஸ் என பல்வேறு கட்டங்களில் என்னை வாய்மொழியாக துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
அவரது நடத்தை எனக்கு தீவிர மன உளைச்சலை ஏற்படுத்தியது. நான் கையெழுத்திட்ட பிளாங்க் செக்குகளை வைத்துக் கொண்டு மோசடி செய்து ஸ்ரீகுமார் என்னை ஏமாற்றினார். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன” என்று கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)