Published on 22/12/2018 | Edited on 22/12/2018

நடிகர் தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் உருவான வட சென்னை முதல் பாகம் படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவரவேற்பை பெற்ற நிலையில் இவர்கள் கூட்டணியில் மீண்டும் ஒரு படம் உதயமாகியுள்ளது. வட சென்னை படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் உருவாகும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது வேறு ஒரு புதிய படம் மூலம் இவர்கள் நான்காவது முறையாக இணைந்துள்ளனர். வி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு 'அசுரன்' என பெயரிட்டுள்ளனர். தனுஷ் நடித்து வெற்றிமாறன் இயக்கும் இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.