Advertisment

வெளியாகும் இரண்டு பாடல்கள் - சர்ப்ரைஸ் கொடுத்த அசுரன் படக்குழு... ரசிகர்கள் மகிழ்ச்சி!

வெற்றிமாறன் - தனுஷ் ஆகிய இருவரும் அசுரன் படத்தின் மூலம் நான்காவது முறையாக கூட்டணி சேருகின்றனர். இப்படத்தின் படபிடிப்பு வடசென்னை படம் வெளியான ஒரு வாரத்திலேயே தொடங்கப்பட்டுவிட்டது. அதனை அடுத்து விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது முடிவடைந்து ரிலீஸுக்கு தயராக இருக்கிறது.

Advertisment

dhanush

கலைப்புலி.எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் சார்பில் உருவாகி வரும் இப்படத்தில் தனுஷ் அப்பா, மகன் என இரண்டு வேடத்தில் நடிக்கிறார். பூமணி எழுத்தில் வெளியான வெக்கை நாவலை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்படுகிறது. மலையாள சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் மஞ்சு வாரியர்தான் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படம்தான் மஞ்சு வாரியருக்கு முதல் படம்.

Advertisment

alt="sixer ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="17fe7be8-00ba-4678-b817-0491d795ba27" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/336x150%20sixer%20ad_8.jpg" />

அக்டோபர் 4ஆம் தேதி இப்படம் ரிலீஸாகிறது என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் கத்திரி பூவழகி என்றொரு பாடல் இன்று வெளியாக இருப்பதாக நேற்று படக்குழு அறிவித்திருந்தது. தற்போது இப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் மேலும் பொல்லாத பூமி என்றொரு பாடலும் வெளியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

DHANUSH asuran
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe