'என் கதைய முருகதாஸ் திருடிட்டார்' - மீண்டும் சர்ச்சையில் ஏ.ஆர்.முருகதாஸ்

sarkar

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

விஜய் - ஏ.ஆர் முருகதாஸ் கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியிருக்கும் 'சர்கார்' படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் நடந்த இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா ரசிகர்களிடையே ஹிட்டடித்தது. இந்நிலையில் தீபாவளி வெளியீடாக வரவிருக்கும் இப்படத்தின் படத்தின் கதை தன்னுடையது என உதவி இயக்குநர் வருண் என்பவர் தற்போது புகார் ஒன்றை அளித்துள்ளார். இவர் 'செங்கோல்' என்ற பெயரில் ஒரு கதையை எழுதி எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்து வைத்திருந்ததாகவும், அந்த கதையை திருடித்தான் முருகதாஸ் 'சர்கார்' படத்தை உருவாக்கி வருவதாகவும் புகார் அளித்துள்ளார். இதையடுத்து எழுத்தாளர் சங்கம் இதுகுறித்து தற்போது விசாரனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே விஜய் - ஏ.ஆர் முருகதாஸ் கூட்டணியில் உருவான 'கத்தி' படத்தின் கதைக்கும் இதேபோன்று 'அறம்' பட இயக்குனர் கோபி நாயனார் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முருகதாஸ் இது போன்ற சர்ச்சையில் மீண்டும் சிக்கியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

vijay62 armurugadoss keerthysuresh vijay62
இதையும் படியுங்கள்
Subscribe