ஜெய்வந்த், பிக்பாஸ் சரவணன், நகைச்சுவை நடிகர்கள் சென்ராயன்,ராமர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'அசால்ட் & ஃபால்ட்'. ஒயிட் ஹார்ஸ் சினிமாஸ் மற்றும் ஃப்ரீ ஆப் காஸ்ட் ப்ரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தினை நடன இயக்குனர் பூபதி ராஜா இயக்குகிறார். இப்படமானது ‘அசால்ட்’ மற்றும் ‘ஃபால்ட்’ என்ற பெயரில் இரு படங்களாக உருவாகி வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. 'ஒருபடப்பிடிப்பில் இரு படங்கள்' என்ற வித்தியாசமான முயற்சி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.