மிகவும் பிரபலமான தொலைக்காட்சி போட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் போட்டி. இது ஒவ்வொரு மொழிகளிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக ஹிந்தியில் 13வது சீஸன் தற்போது ஒளிப்பரப்பாகிறது. இந்நிலையில் தமிழில் இதுவரை மூன்று சீஸன் ஒளிப்பரப்பாகியுள்ளது. இந்த மூன்று சீஸன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.

Advertisment

biggboss

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இந்நிலையில் கடந்த இரண்டாவது பிக்பாஸ் போட்டியில் பங்குபெற்றவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் ஒருசில படங்களில் மட்டும் நடித்தவருக்கு அவ்வளவாக பட வாய்ப்பு வரவில்லை, இதன்பின் பிக்பாஸ் போட்டியில் கலந்துகொண்டார். இதில் கிடைத்த பிரபலத்தை வைத்து மீண்டும் தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வர தொடங்கியுள்ளார். மூன்று படங்களில் நடிகையாக நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியானது.

Advertisment

இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா தத்தாவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டிருந்ததாக அவரே ட்விட்டரில் பதிவிட்டு தெரிவித்துள்ளார். அந்த பதிவில், “ இவ்வளவு நாள் என்னுடைய ட்விட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டிருந்தது. என்னுடைய டீமின் உதவியால் பல போராட்டங்களுக்கு பின்பு என்னுடைய ட்விட்டர் அக்கவுண்டை மீட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.