asin explained about his divorced rumours

Advertisment

தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அசின். கடந்த 2016 ஆம் ஆண்டு தொழிலதிபர் ராகுல் ஷர்மா என்பவரை திருமணம் செய்த நிலையில் அதன் பிறகு நடிப்பில் இருந்து விலகினார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

சமீபத்தில்தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்அவர் கணவருடன் இருந்த புகைப்படங்களை நீக்கியதாகக் கூறப்படும் நிலையில், அவர் ராகுல் ஷர்மாவை விவாகரத்து செய்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. இதனால் நீண்ட வருடங்கள் அசின் குறித்து எந்த தகவலும்வெளியாகாமல் இருந்த நிலையில் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டார். இந்நிலையில் இச்செய்தி குறித்து தற்போது விளக்கமளித்துள்ளார் அசின்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், "எங்கள் கோடை விடுமுறையின் நடுவில், ஒருவரையொருவர் நேருக்கு நேராக அமர்ந்து உணவை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். மேலும் சில கற்பனையான மற்றும் முற்றிலும் ஆதாரமற்ற செய்திகளை கண்டோம். நாங்கள் எங்கள் திருமணம் குறித்து எங்கள் குடும்பத்துடன் செலவிட்ட நேரத்தை நினைவுகூர்ந்தோம். நாங்கள் பிரிந்துவிட்டதாக கேள்விப்பட்டோம். உண்மையாகவா...? தயவுசெய்து இதைவிட சிறந்த வதந்திகளை உருவாக்குங்கள். இதற்காக என் அற்புதமான விடுமுறையில் 5 நிமிடம் செலவிட்டு வீணடித்துள்ளேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.