எதிர்பார்ப்பை அதிகரிக்கும் 'என்ன சொல்ல போகிறாய்'... டீசரை வெளியிட்ட படக்குழு! 

ashwin's enna solla pogirai movie teaser released

குக் வித்கோமாளி நிகழ்ச்சி மூலம்பிரபலமான அஸ்வின் இயக்குநர் ஹரிஹரன் இயக்கும் என்ன சொல்ல போகிறாய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார். இப்படத்தில் அவந்திகா, தேஜஸ்வினி இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். குக்-வித் கோமாளி புகழ், டெல்லி கணேஷ், சுபா பஞ்சு ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விவேக் - மேர்வின் இசையமைக்க, இப்படத்தை ட்ரெண்ட்ஸ் ஆர்ட் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்பு பணிகளை முடித்துள்ள படக்குழு, இறுதிக்கட்ட பணியில்தீவிரம் காட்டி வருகிறது

சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரவேற்பை பெற்றநிலையில் 'என்ன சொல்ல போகிறாய்' படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது இந்த டீசர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது . மேலும் அஸ்வின் முதல் முறையாக நடிக்கும் படம் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Ashwin kumar enna solla pogirai Vijay tv Pugazh
இதையும் படியுங்கள்
Subscribe