Advertisment

"என் கனவின் முதல் படி"... இணையத்தில் வைரலாகும் அஷ்வினின் குரல் பதிவு!

ashwin tweet trending on social media

குக்-வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர்அஷ்வின். இந்நிகழ்ச்சிரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதில் அஷ்வின் - ஷிவாங்கி ஜோடிக்குப் பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இந்நிகழ்ச்சியில் அஷ்வினுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைத்துள்ளது. அந்தவகையில், தற்போது அறிமுக இயக்குநர் ஹரிஹரன் இயக்கும் 'என்ன சொல்ல போகிறாய்' படத்தில் அஷ்வின்நடித்துவருகிறார். அவந்திகா, தேஜஸ்வினி இருவரும் கதாநாயகிகளாகநடிக்கிறார்கள். படத்தின் படப்பிடிப்பு பணிகளை முடித்துள்ள படக்குழு, இறுதிக்கட்ட பணியில்தீவிரம் காட்டிவருகிறது. இதைத்தொடர்ந்து 'என்ன சொல்ல போகிறாய்' படத்தின் டீசரைப் படக்குழு இன்று (10.11.2021) மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளது.

Advertisment

இந்நிலையில் நடிகர் அஷ்வின் படம் தொடர்பாக குரல்பதிவுஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், "வணக்கம், எல்லாரும் நல்லா இருப்பீங்கன்னுநம்புறேன், பாதுகாப்பாக இருங்கள். என் முதல் படத்தின் டீசர் இன்று வெளியாகிறது. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. என் கனவின் முதல் படியாக இந்த டீசர் வெளியாக உள்ளது. இது எல்லாவற்றிற்கும் காரணம் நீங்கள்தான், உங்கள் அனைவருக்கும் நன்றி" என தெரிவித்துள்ளார். தற்போது இந்தப் பதிவு சமூகவலைதளங்களில்வைரலாகிவருகிறது.

Advertisment

Ashwin Ashwin kumar enna solla pogirai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe