Advertisment

"சினிமாவில் ரெண்டு பேரை பிடிக்கும்... ஒருத்தர் சூப்பர் ஸ்டார்; இன்னொருத்தர்..." - நடிகர் அஷ்வின் குமார் பேச்சு!

Ashwin kumar

ட்ரைடன்ட்ஸ் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரிப்பில், ஹரிஹரன் இயக்கத்தில் குக் வித் கோமாளி புகழ் அஷ்வின் குமார் நாயகனாக நடித்துள்ள படம் 'என்ன சொல்ல போகிறாய்'. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. அஷ்வின் குமார், தேஜஸ்வினி, குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Advertisment

இந்நிகழ்வில் பேசிய நடிகர் அஷ்வின், "இறைவனுக்கும் உங்களுக்கும் நன்றி. உங்கள் அன்பால்தான் இங்கு நிற்கிறேன். நீங்கள் தரும் அன்புதான் என்னை வளர்த்துள்ளது. நான் கனவு கண்டிருக்கிறேன். ஆனால் இந்த இடத்திற்கு வருவேன் என்று நினைக்கவில்லை. உங்கள் அன்பால்தான் இது சாத்தியமாகியிருக்கிறது. நானும் உங்கள் இடத்தில் இருந்து வந்திருக்கிறேன் என் இடத்தில் இருந்து பார்த்தால்தான் உங்கள் அன்பு புரியும். என்ன சொல்லப் போகிறாய் படத்திற்கு முன், பின் என என் வாழ்க்கையை பிரிக்கலாம். விஜய் டீவி என் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பம் தந்திருக்கிறது, அவர்களுக்கு நன்றி. ஒரு காமெடி ஷோ இவ்வளவு பெரிய பிரபலம் தருமா என நினைத்துக்கூட பார்க்கவில்லை. உங்கள் அன்புக்கு ஏற்ற சரியான படம் கொடுக்க வேண்டும் என்று காத்திருந்தேன். இப்போது இந்தப்படத்தின் மூலம் உங்களிடம் வந்திருக்கிறேன். உங்கள் வாழ்வில் நல்ல நண்பன் இருந்தால் உங்கள் வாழ்வு கண்டிப்பாக சிறப்பாக இருக்கும்.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="a7322c8e-3dcc-419f-a384-6b360ce08a6e" height="308" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/ik-ad_5.jpg" width="514" />

ரவி சார் யாராயிருந்தாலும் அவர் ஆபீஸில் சாப்பாடு போடுவார். அவர் ஆபீஸில் நிறைய சாப்பிட்டிருக்கிறேன். முதலில் அவர் சொன்ன கதையை வேண்டாம் எனக் கூறிவிட்டேன். பெரிய நிறுவன வாய்ப்பை மறுத்து விட்டோம் என வருத்தமாக இருந்தது. நீங்கள் என் மேல் அன்பு வைத்து என்னை பார்க்க வருகிறீர்கள் உங்களை ஏமாற்றக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். நான் கதை கேட்கும்போது நல்லாயில்லனா தூங்கிவிடுவேன். 40 கதைக்கும் மேல் நான் தூங்கியிருக்கேன். நான் தூங்காமல் கேட்ட ஒரே கதை என்ன சொல்ல போகிறாய் தான். ஹரிஹரன் அவ்வளவு சிறப்பாக செய்திருக்கிறார். இசையமைப்பாளர் விவேக் மெர்வின் அட்டகாசமான இசையை தந்திருக்கிறார்கள். நாயகிகள் இருவருமே மிகுந்த நட்புடன் நடித்து தந்தார்கள். படம் பார்க்க பிரமாண்டமாக வந்திருக்கிறது. புகழ் இந்தப்படத்தில் அழகாக இருக்கிறார். எனக்கு சினிமாவில் ரெண்டு பேரை பிடிக்கும் சூப்பர் ஸ்டார். அப்புறம் சிம்பு சார். அவர் போன் செய்து என்னை வாழ்த்தினார் அவருக்கு நன்றி. சிவகார்த்திகேயன் எனக்கு மிகப்பெரிய இன்ஷ்பிரேஷானாக இருந்திருக்கிறார். அவரை நினைத்து தான் என் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்திருக்கிறேன். என்ன சொல்லப் போகிறாய் படத்தை நீங்கள் பார்த்து கொண்டாடுவதை காண ஆவலாக இருக்கிறேன்" எனக் கூறினார்.

Ashwin kumar
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe