Advertisment

அஸ்வின் நடிக்கும் புதிய படம்

Ashwin Kumar next movie update

தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமான அஸ்வின் சில படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பின்பு கடந்த ஆண்டு வெளியான 'என்ன சொல்ல போகிறாய்' படம் மூலம் ஹீரோவாக ஆனார். பின்பு 'மீட் கியூட்' என்ற தெலுங்கு ஆந்தாலஜி ஜானர் படத்தில்நடித்திருந்தார். அதனைத்தொடர்ந்து சமீபத்தில் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான 'செம்பி' படத்தில் நடித்திருந்தார்.

Advertisment

இதனைத்தொடர்ந்து அஸ்வின் நடிக்கும் புது படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ழென் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளார். ரொமாண்ட்டிக் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இப்படத்திற்கான மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாக தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இயக்குநர் அரவிந்த் ஸ்ரீனிவாசன், அருள்நிதி நடிப்பில் உருவான 'தேஜாவு' திரைப்படத்தை இயக்கியவர். பின்பு இந்த படத்தை தெலுங்கில் 'ரிபீட்' என்ற தலைப்பிலும் ரீமேக் செய்திருந்தார்.

Ashwin kumar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe