Advertisment

அஸ்வின் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

ashwin kumar movie first look poster released

குக்-வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர்அஸ்வின். இந்நிகழ்ச்சிரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதில் அஸ்வின் - ஷிவாங்கி ஜோடிக்கு ஒரு பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இந்நிகழ்ச்சியில் அஸ்வினுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்தவகையில் தற்போது 'காதல் ஒன்று கண்டேன்', 'என்ன சொல்ல போகிறாய்' உள்ளிட்ட படங்களில் அஸ்வின் நடித்துவருகிறார்.

Advertisment

இந்நிலையில், அஸ்வின் நடிக்கும் 'என்ன சொல்ல போகிறாய்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தில் அவந்திகா, தேஜஸ்வினி இருவரும் கதாநாயகிகளாகநடிக்கிறார்கள். குக்-வித் கோமாளி புகழ், டெல்லி கணேஷ், சுபா பஞ்சு ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அறிமுக இயக்குநர் ஹரிகரன் இயக்கும் இப்படத்தைட்ரெண்ட்ஸ் ஆர்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் குறித்தானஅடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

சமீபத்தில், அஸ்வின் நடிப்பில் 'குட்டி பட்டாசு' மற்றும் 'அடிப்பொலி' ஆல்பம் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

puzhal cook with comali Ashwin
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe