Advertisment

அஸ்வின் - ஷிவாங்கி காம்பினேஷனில் இணையத்தைக் கலக்கும் பாடல்!

vdbdsbs

'குக் வித் கோமாளி 2' ரியாலிட்டி நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர் நடிகர் அஸ்வின். இந்த நிகழ்ச்சி ரசிகர்களின் வரவேற்புடன் மாபெரும் வெற்றிபெற்றது. இதனால் நடிகர் அஸ்வின் - ஷிவாங்கி ஜோடி பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது. நடிகர் அஸ்வின் தற்போது ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகும் 'என்ன சொல்ல போகிறாய்' படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் புகழ் (விஜய் டிவி) முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Advertisment

இதற்கிடையே, 'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தின் இசை மூலம் இளைஞர்களின் மனதை கவர்ந்த இசையமைப்பாளர் சித்து குமார் இசையமைத்து, இயக்கியுள்ள 'அடிபொலி' என்ற பாடலை ஓணம் பண்டிகையை முன்னிட்டு மலையாள நடிகர் மோகன் லால், மலையாள இயக்குநர் வினீத் ஸ்ரீனிவாசன் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். அஸ்வின் குமார், குஷி நடிப்பில் வெளியாகியுள்ள இப்பாடல் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுவருகிறது. மேலும், இயக்குநர் வினீத் ஸ்ரீனிவாசன் மற்றும்ஷிவாங்கி குரலில் ரிலீஸாகியுள்ள இப்பாடல் இணையத்திலும் வைரலாகிவருகிறது.

Advertisment

cooku with comali Ashwin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe