‘ஓ மை கடவுளே’ மற்றும் ‘டிராகன்’ ஆகிய வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து, அடுத்ததாக சிம்புவை வைத்து ஒரு படம் இயக்க கமிட்டாகியுள்ளார். மேலும் மீண்டும் டிராகன் பட நாயகன் மற்றும் தயாரிப்பாளர் கூட்டணியில் ஒரு படம் இயக்குவதாக தெரிவித்துள்ளார். டிராகன் படத்திற்காக ரஜினி, கமல் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்களின் பாராட்டை பெற்றிருந்தார்.
இந்த நிலையில் இவர் அல்லு அர்ஜூனை சந்தித்துள்ளார். இதனை தனது சமூக வலைதளப்பக்கம் மூல தெரிவித்த அவர், “அல்லு அர்ஜூன் உண்மையிலேயே ஒரு ஐகான், மற்றும் பெர்ஃபெக்ட் ஜெண்டில்மேன். உங்கள் அன்புக்கு நன்றி. மேலும் என் வேலைக்காக நீங்கள் பாராட்டிய வார்த்தைகளுக்கும் நன்றி. உங்களின் வார்த்தை நிறைய அர்த்தத்தை கொடுக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பின் போது இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தும் உடன் இருந்துள்ளார். அவரைப் பற்றி குறிப்பிட்டு அஷ்வத் மாரிமுத்து, “இனிமையான நண்பராகவும் சிறந்த மனிதராகவும் இருப்பதற்கு நன்றி” எனப் பதிவிட்டுள்ளார்.