Advertisment

“உண்மை ஒரு சிங்கம் போன்றது” - பதிவிட்ட உடனே நீக்கிய அசோக் செல்வன்

ashok selvan post issue

Advertisment

அசோக் செல்வன் தற்போது ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’ மற்றும் 'கேங்க்ஸ்' என்ற வெப் சீரிஸை கைவசம் வைத்துள்ளார். இதில் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’ படம் ரிலிஸூக்கு தயாராகியுள்ளது. இப்டத்தின் இசை வெளியீட்டு விழா, கடந்த 27ஆம் தேதி நடைபெற்றது. இதில் அவர் கலந்து கொள்ளவில்லை. அந்நிகச்சியில் படத்தின் தயாரிப்பாளரான திருமலை அசோக் செல்வன் மீது பகிரங்க குற்றச்சாட்டை வைத்திருந்தார்.

அவர் பேசும்போது, “ரஜினிகாந்த் மற்றும் விஜய் போன்ற உச்ச நட்சத்திரங்கள் கூட அவர்கள் படத்தின் புரமோஷனுக்கு செல்கிறார்கள். ஆனால் அசோக் செல்வன் தன்னுடைய படத்தின் புரமோஷனில் கூட பங்கேற்காமல் இருக்கிறார்” எனத்தெரிவித்தார். மேலும் அவர் கேரவேணில் அமர்ந்து கொண்டு பணம் கொடுத்த பிறகுதான் படப்பிடிப்பிற்கு வந்ததாகவும் அதனால் தனக்கு ரூ.8 லட்சம் செலவானதாகவும் அதை அவர் திருப்பி தருவாரா? என மேடையிலேயே தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்தச் சூழலில் அசோக் செல்வன் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வாசகத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் “உண்மை ஒரு சிங்கம் போன்றது. நீங்கள் அதைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லை, அதை விட்டுவிடுங்கள். அது தன்னைத்தானே தற்காத்துக் கொள்ளும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பின்பு அப்பதிவை சில நிமிடங்களிலே நீக்கியுள்ளார்.

Ashok Selvan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe