Advertisment

அசோக் செல்வன் நடிக்கும் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’

ashok selvan new movie update Emakku Thozhil Romance

அசோக் செல்வன் ப்ளு ஸ்டார் பட வெற்றியை தொடர்ந்து தற்போது நோஹா ஆபிரஹாம் இயக்கத்தில் கேங்க்ஸ் என்ற வெப் தொடரில் நடிக்கிறார். இத்தொடருக்கு சௌந்தர்யா ரஜினிகாந்த் ஷோ ரன்னராக பணியாற்றுகிறார். இதனை தொடர்ந்து ப்ரியா இயக்கத்தில் பொன் ஒன்று கண்டேன் படத்தில் நடித்துள்ளார். இதில் வசந்த் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

Advertisment

இந்த நிலையில் அசோக் செல்வன் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியாகியுள்ளது. இதனை விஜய் சேதுபதி, ஆர்யா ஆகியோர் அவர்களது எக்ஸ் தளத்தில் வெளியிட்டனர்.படத்திற்கு ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கும் இப்படத்தில் அவந்திகா மிஸ்ரா கதாநாயகியாக நடிக்கிறார். திருமலை தயாரிக்கும் இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார்.

Advertisment

இப்படத்தின் முழு படப்பிடிப்பு பணிகளும் முடிந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்சன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் டீசர், டிரெய்லர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Ashok Selvan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe