மூன்று கதாநாயகிகளுடன் அசோக் செல்வன்... டைட்டில் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

ashok selvan movie tittle look poster released

'தெகிடி', 'ஓ மை கடவுளே' ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான அசோக் செல்வன் சமீபத்தில் இயக்குநர்விஷால் வெங்கட் இயக்கத்தில் சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதோடு, கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="c2796e78-39f7-41f7-8ff9-bc952ce3b4e0" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/article-inside-ad%20%281%29_5.jpg" />

இப்படத்தின் வெற்றியைதொடர்ந்து அறிமுக இயக்குநர் ரா.கார்த்தி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அபர்ணா பாலமுரளி, ரித்து வர்மா, ஷிவாத்மிகா ராஜா சேகர் ஆகிய மூன்று நாயகிகள் நடிக்கின்றனர். கோபி சுந்தர் இசையமைக்கும் இப்படத்தைViacom18 ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து Rise East Entertainment நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில் படத்தின் டைட்டில் லுக் போஸ்டரைபடக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படிஇப்படத்திற்கு தமிழில் 'நித்தம் ஒரு வானம்' என்றும் தெலுங்கில் 'ஆகாஷம்'என்றும் பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாகநடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மாற்று இசை வெளியீடு குறித்தஅறிவிப்புகள் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

ashokselvan
இதையும் படியுங்கள்
Subscribe