gvegeagas

Advertisment

சூது கவ்வும், தெகிடி, ஓ மை கடவுளே படங்களின் மூலம் பிரபலமான நடிகர் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்க, வயகாம் 18 ஸ்டுடியோஸ் - ரைஸ் ஈஸ்ட் எண்டெர்டெய்ன்மெண்ட் இணைந்து ஒரு புதிய திரைப்படத்தைத் தயாரிக்கிறது. இதில் நடிகர் அசோக் செல்வனுடன் ஜோடியாக 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' புகழ் ரிது வர்மா, 'சூரரைப்போற்று' புகழ் அபர்ணா பாலமுரளி மற்றும் சிவாத்மிகா ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஆர். கார்த்திக் இயக்குகிறார். முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான ஜார்ஜி சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, கோபி சுந்தர் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது.