/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ashok-selvan-priya-bavani-shankar.jpg)
‘ஓ மை கடவுளே’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அசோக் செல்வன் நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரபலத் தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான ஆர்.ரவீந்திரனின் 'ட்ரைடண்ட் ஆர்ட்ஸ்' இப்படத்தை தயாரிக்கிறது.
இந்தப் படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக, பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.
'Production No.8' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை, சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்குகிறார். நாசர், முனிஸ்காந்த், ரவி மரியா, கே.பி.ஒய்.யோகிஉள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
‘அடி கபயாரே கூட்டமணி’ என்னும் மலையாளப் படத்தின் ரீமேக், இப்படம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)