ashok selvan Emakku Thozhil Romance release postponed from November 15th due to heavy rains this week

அசோக் செல்வன் தற்போது நோஹா ஆபிரஹாம் இயக்கத்தில் கேங்க்ஸ் என்ற வெப் தொடரில் நடிக்கிறார். இத்தொடருக்கு சௌந்தர்யா ரஜினிகாந்த் ஷோ ரன்னராக பணியாற்றுகிறார். இதனிடையே ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’ என்ற தலைப்பில் ஒரு படம் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கியுள்ளார். அஷோக் செல்வனுக்கு ஜோடியாக அவந்திகா மிஸ்ரா நடித்துள்ளார். திருமலை தயாரித்துள்ள இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.

Advertisment

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மார்ச்சில் வெளியானது. இதையடுத்து படத்தின் ரிலீஸ் தேதி வெளியிட்ட நிலையில் வருகிற 15ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. இதையொட்டி படத்தின் ஸ்னீக் பீக், புரொமோ உள்ளிட்டவைகள் அடுத்தடுத்து வெளியாகிக் கொண்டு வந்தன. இந்த நிலையில் இப்படம் தள்ளி போகவுள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனம் திடீரென தெரிவித்துள்ளது.

Advertisment

இது தொடர்பாக வெளியாகியுள்ள செய்திக் குறிப்பில், “தற்போது உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மையத்தின் காரணமாக இன்னும் ஒருவாரம் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த சூழலில் திரைப்படத்தை வெளியிட்டால் வசூலில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு இருக்கும் என்ற அச்சத்தில் இப்படத்தின் வெளியீட்டை தள்ளிவைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தொடர் மழை நின்றதும் விரைவில் படம் வெளியிடப்படும். படத்தின் வெளியீட்டு தேதி பின்னர் அறிவிக்கப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.