/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/362_12.jpg)
அசோக் செல்வன் நடிப்பில் அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கத்தில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான படம் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’. இப்படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக அவந்திகா மிஸ்ரா நடித்துள்ளார். திருமலை தயாரித்துள்ள இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் நடிகை ஊர்வசி மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் அழகம் பெருமாள், பக்ஸ், எம்.எஸ்.பாஸ்கர், விஜய் வரதராஜ், படவா கோபி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். ரொமான்ஸ் அதிகமுடன் இருக்கும் ஒரு இளைஞனின் காதல், அதனால் ஏற்படும் பிரச்சனைகள், அவனுக்கு உதவும் குடும்பம், நண்பர்கள் என ரொமான்ஸ் காமெடியாக இப்படம் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் இப்படத்தின் ஓ.டி.டி. அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி சன் நெக்ஸ்ட் தளத்தில் இப்படம் ஸ்ட்ரீமாகி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)