Skip to main content

அஜித், விஜய் பட நடிகருக்கு கரோனா தொற்று! ரசிகர்கள் கவலை!

Published on 13/03/2021 | Edited on 13/03/2021

 

hrehrs

 

தமிழில் ‘தில்’ படம் மூலம் அறிமுகமான நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி, பின்னர் ‘பாபா’, ‘ஏழுமலை’, ‘பகவதி’, ‘தம்’, ‘ஆறு’, ‘கில்லி’, ‘ஈ’, ‘அனேகன்’, ‘என்னை அறிந்தால்’ உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமடைந்தார். வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்...

 

“இது நான் விரும்பாத ஒன்று. நான் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன். கரோனா அறிகுறிகள் இல்லை. விரைவில் குணமடைவேன் என்று நம்புகிறேன். உங்கள் வாழ்த்துகளும், அன்பும் விலைமதிப்பற்றவை. பாதுகாப்பாக இருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரைவரின் வாழ்க்கையை கண்டு நெகிழ்ந்து வீடியோ போட்ட வில்லன் நடிகர்...

Published on 02/03/2020 | Edited on 02/03/2020

தில், கில்லி, ஏழுமலை உள்ளிட்ட பல படங்களில் நடித்த பிரபல குணச்சத்திர நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பிற மொழி சினிமாக்களிலும் பிரபலமானவர். தற்போது தமிழ் படங்களில் அவ்வளவாக தலைக்காட்டாத ஆஷிஷ் பெங்காலி, மராத்தி படங்களில் நடித்து வருகிறார்.
 

ashish vidyathri

 

 

இந்நிலையில் ஆஷிஷ் ஃபேஸ்புக்கில் தன்னுடைய கார் ட்ரைவர் குறித்து எமோஷனலாக வீடியோ ஒன்றை பகிர்ந்திருப்பது வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், “இன்று காலை மும்பையில் இருந்து பூனேவுக்கு பயணித்து கொண்டிருந்தேன். அப்போது என்னுடைய ட்ரைவர் எங்களிடம், ஒரு கால் செய்ய வேண்டும் என ஃபோன் கேட்டார். ஃபோனை வாங்கிய அவர் தன் மகளுக்கு கால் செய்து அவளை எழுந்திருக்க சொன்னார். அதற்கு அந்த மகள், அப்பா.. நான் உங்களை 5 மணிக்கு எழுப்ப சொன்னால், இப்போது எழுப்புறீர்கள் என  கூறினார். 

பரவாயில்லை, நீ இப்போது எழுந்து உணவு தயார் செய்துவிட்டு கிளம்பு என அந்த அப்பா சொல்ல, நான் 4 மணிக்கே எழுந்து உணவு தயார் செய்துவிட்டு, இப்போது பள்ளிக்கு கிளம்பி கொண்டிருக்கிறேன் என அந்த குழந்தை சொல்லியது. இதை கேட்ட நாங்கள், அவருடைய மகள் குடும்பத்தை கவனிக்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டால்  என சந்தோஷமடைந்தோம். 

பிறகு நான் அவரிடம், உங்கள் வீட்டில் யாரெல்லாம் இருக்கிறீர்கள் என கேட்ட போது, எனது 12 வயது மகளும் 7 வயது மகனும்தான், கடந்த டிசம்பர் 25 அன்று என் மனைவி இறந்துவிட்டார் என்று ட்ரைவர் கூறினார். அதை அறிந்த பின்பு தான், வாழ்க்கையின் பொறுப்பை அந்த சிறுமி இந்த வயதிலேயே ஏற்றுக் கொண்டால் என்று தெரிந்து கொண்டோம். அதே நேரத்தில் தன் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக உழைக்கும் அப்பாவை கண்டு நெகிழ்ந்து போனேன்” என்று அவர் நெகிழ்ச்சியான வீடியோவை பகிர்ந்துள்ளார்.