/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/71_29.jpg)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஆர்யா நடிப்பில் உருவான ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. அமேசான் ப்ரைம் தளத்தில் நேரடியாக வெளியான இப்படத்திற்கு விமர்சனரீதியாக மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து, ஆர்யா கைவசம் ‘எனிமி’, ‘அரண்மனை 3’ ஆகிய படங்கள் உள்ளன. இவ்விரு படங்களுக்கான படப்பிடிப்பும் நிறைவுபெற்றதைத் தொடர்ந்து, இறுதிக்கட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன.
சுந்தர்சிஇயக்கத்தில் உருவாகியுள்ள ‘அரண்மனை 3’ படத்தை வரும் செப்டம்பர் மாதம் திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘எனிமி’ திரைப்படத்தையும் செப்டம்பர் மாதம் திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ‘சார்பட்டா பரம்பரை’யின் வெற்றி, மகள் பிறந்தது, அடுத்தடுத்து இரு முக்கியப் படங்கள் ரிலீஸ் என வழக்கத்தைவிட கூடுதல் உற்சாகத்தில் ஆர்யா உள்ளதாகக் கூறுகின்றனர் நமக்கு நெருங்கிய சினிமா வட்டாரத்தினர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)