Published on 20/11/2020 | Edited on 20/11/2020

இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான படம் அரண்மனை. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அரண்மனை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கினார் சுந்தர்.சி. அப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்த நிலையில், அவர் தற்போது அரண்மனை படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கி வருகிறார்.
அரண்மனை 3 படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா ஆகியோர் நடிக்கின்றனர். கரோனா தொற்று பரவலால் பாதிக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு, சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வந்தது.
இந்தநிலையில் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, பொள்ளாச்சியில் நேற்று தொடங்கியுள்ளது. மேலும் படத்தின் படப்பிடிப்பு, வரும் டிசம்பர் 1 ஆம் தேதியோடு முடிவடையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அரண்மனை 3 படத்தில் ஆர்யா பேயாக நடிப்பதாகவும் தகவல் வெளியாகிவுள்ளது.