Published on 10/03/2019 | Edited on 10/03/2019
நடிகர் ஆர்யாவும் நடிகை சாயிஷாவும் 'கஜினிகாந்த்' திரைப்படத்தில் இணைந்து நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. கடந்த பிப்ரவரி 14 - காதலர் தினத்தன்று இவர்கள் தங்கள் திருமணம் குறித்து ட்விட்டரில் அறிவித்தனர்.

அதன்படி ஹைதராபாத்தில் இன்று அவர்களது திருமண நிகழ்வுகள் நடந்துவருகின்றன. நேற்று முன்தினத்திலிருந்தே திருமண விருந்துகள் களைகட்டத் தொடங்கின. சாயிஷா, பிரபல பாலிவுட் நடிகர் நடிகர் திலிப்குமாரின் உறவினர் ஆவார். இதனால் கடந்த 8ஆம் தேதி மாலை ஹைதராபாத்தில் நடந்த விருந்தில் சஞ்சய் தத் உள்ளிட்ட பல பாலிவுட் பிரபலங்கள் கலந்துகொண்டு நடனமாடி மகிழ்ந்தனர். இன்று திருமணம், அதைத் தொடர்ந்து விருந்து என நிகழ்வுகள் களைகட்டியுள்ளன.