arya

‘அரிமா நம்பி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குநர் ஆனந்த் சங்கர். இவர், தற்போது நடிகர் விஷாலை வைத்து 'எனிமி' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மிர்னாலினி ரவியும், வில்லனாக ஆர்யாவும் நடித்து வருகின்றனர்.

Advertisment

இப்படத்தின் படப்பிடிப்பானது சென்னை, ஐதராபாத், துபாய் உள்ளிட்ட பகுதிகளில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ‘எனிமி’ படத்தில் தனது கதாபாத்திரத்திற்கான அனைத்து காட்சிகளையும் நடிகர் ஆர்யா நடித்து முடித்துள்ளதாக படத்தின் இயக்குநர் ஆனந்த் சங்கர் தெரிவித்துள்ளார்.

Advertisment

‘எனிமி’ படத்தில் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் நடித்தது குறித்து நடிகர் ஆர்யா தெரிவிக்கையில், "ஆனந்த் சங்கர், உங்களுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியளிக்கிறது. உங்களுடைய ஆற்றலும் படமாக்கும் விதமும் எனக்குப் பிடித்துள்ளது. உங்களுடன் இணைந்து மீண்டும் பணியாற்றுவேன் என்று நம்புகிறேன்" எனக் குறிப்பிட்டார்.