Advertisment

ஒரே இரவில் நடக்கும் கதையில் ஆர்யா

arya the village web series trailer released

Advertisment

ஆர்யா கடைசியாக முத்தையாஇயக்கத்தில்'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து மனு ஆனந்த் இயக்கும் ‘மிஸ்டர் எக்ஸ்’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கில் வெங்கடேஷ் நடிக்கும் ‘சைந்தவ்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதனிடையே முதல் முறையாக வெப் சீரிஸில் ஆர்யா நடித்துள்ள தொடர் ‘தி வில்லேஜ்’. மிலிந்த் ராவ் இயக்கும் இப்படத்தில் கதாநாயகியாக திவ்யா பிள்ளை நடித்துள்ளார். இத்தொடர் கிராஃபிக் நாவலை அடிப்படையாகக் கொண்ட இந்தியாவின் முதல் வெப் சீரிஸாக வெளியாகவுள்ளது. இந்த சீரிஸின் டீசர் சமீபத்தில் வெளியானது. அதில் அமேசான் ப்ரைம் ஒடிடி தளத்தில் வருகிற 24 ஆம் தேதி முதல் இந்த சீரிஸ் ஒளிபரப்பாகவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த சீரிஸின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. ட்ரைலரை பார்க்கையில் ஆர்யா தனது குடும்பத்துடன் ஒரு ரோட் ட்ரிப் செல்கிறார். அப்போது ஆபத்து நிறைந்து ஒரு பகுதியில் மாட்டிக்கொள்கிறார். அதிலிருந்து தப்பித்தாரா இல்லையா என்பதை சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லருடன் சொல்லியிருப்பது போல் தெரிகிறது. மேலும் ஒரு நாள் இரவில் நடக்கும் கதையாக அமைந்துள்ளது.

Advertisment

Actor Arya web series
இதையும் படியுங்கள்
Subscribe