
எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி மூலம் சர்ச்சைகளை ஏற்படுத்திய நடிகர் அடுத்ததாக கஜினிகாந்த், சந்தனதேவன் ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இப்படங்களின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வரும் நிலையில் தன்னால் ஏற்பட்ட சர்ச்சைகள் பற்றியும், தான் நடித்திருக்க வேண்டிய படத்தை பற்றியும் மனம் திறந்த ஆர்யா.... "எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி மற்ற நிகழ்ச்சியை போன்றது அல்ல. என் சொந்த வாழ்க்கையை பாதிக்கும் அளவுக்கு முக்கியமான நிகழ்ச்சி என்பது தெரிந்தேதான் ஒப்புக்கொண்டேன்.நீங்கள் டிவியில் பார்த்தது குறைவுதான். கேமராவுக்கு பின்பு நடந்த நிறைய சம்பவங்கள் என்னை அப்படி ஒரு முடிவு எடுக்க வைத்தது. இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை இயக்கிய சந்தோஷ் இயக்கத்தில் நடிப்பதால் அடல்ட் படத்தில் நடிப்பீர்களா என்று கேட்கிறீர்கள். 'ஏ' சான்றிதழ் வாங்கும் படங்களில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை. நடிக்கவும் மாட்டேன். இரும்புத்திரையில் அர்ஜுன் செய்த அந்த வேடத்தின் முக்கியத்துவம் கருதியே நான் மறுத்தேன். அர்ஜுன் பேசிய வசனங்களை நான் பேசி இருந்தால் மக்கள் சிரித்து இருப்பார்கள்" என்றார்.