Advertisment

"க்ளைமேக்ஸ் சண்டைக்காட்சி எரிமலை வெடிப்பதுபோல இருக்கும்" - நடிகர் ஆர்யா பேச்சு

arya

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால், ஆர்யா, மிருணாளினி ரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ளஎனிமி திரைப்படம் வரும் தீபாவளி தினத்தன்று வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை நடைபெற்றது. விஷால், ஆர்யா உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Advertisment

இந்நிகழ்வில் பேசிய நடிகர் ஆர்யா, "எனிமி படத்தை எனக்கு சொன்னதே விஷால்தான். இது புரட்சித்தளபதி விஷாலுடன் இணைந்து நான் நடிக்கும் இரண்டாவது படம். ஒருநாள் கால் செய்து மச்சான் நான் ஒரு கதை கேட்டேன். நல்ல இருக்கு. நீயும் கேட்டுப்பாரு. உனக்கு நல்லா இருக்கும் என்றார். யார் கதை என்றவுடன் ஆனந்த் சங்கர் கதை என்றார். என்னுடைய கேரக்டர் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்க வேண்டும் என்று விஷால் ஆனந்த் சங்கரிடம் கூறினார். அதற்கேற்ப என்னுடைய கேரக்டரை ஆனந்த் சங்கர் மாற்றி எழுதினார். படத்தில் நிறைய சண்டைக்காட்சிகள் உள்ளன. அதில் நிறைய மெனக்கெடலுடன் விஷால் நடித்துள்ளார். க்ளைமேக்ஸ் சண்டைக்காட்சியைப் பார்க்கும்போது நாமதான் இதுல நடிச்சிருக்கோமா... நாமதான் இதை பண்ணோமா என்று எனக்கே சந்தேகம் வருது. ஒருவேளை இந்தப்படத்தை ரீமேக் செய்தால் இந்த சண்டைக்காட்சியை எப்படி எடுப்பார்கள் என்றெல்லாம் யோசித்திருக்கிறேன். விஷாலுக்கும் எனக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி, கோபம் எல்லாம் க்ளைமேக்ஸில் வந்து சேரும்போது எரிமலை வெடிப்பது மாதிரியான உணர்வில் இருவரும் சண்டை போட்டிருப்போம். அந்த சண்டைக்காட்சியை எடுக்கும்போது இருவருக்குமே நிறைய அடிபட்டது. படத்தில் நடித்த மற்ற அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர்" எனக் கூறினார்.

Advertisment

enemy Actor Arya
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe