கத்தார் நாட்டில் வசித்து வரும் நடிகர் ஆர்யாவின் சகோதரிக்கு லாட்டரியில் 32 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ஆர்யாவின் சகோதரியான தஸ்லீமா, தன்னுடைய குடும்பத்தினருடன் கத்தாரில் வசித்து வருகிறார். இவர், அந்நாட்டில் விற்கப்படும் பிரபல லாட்டரி சீட்டை கடந்த மாதம் வாங்கியுள்ளார். அதற்கான குலுக்கல் முறை சமீபத்தில் நடைபெற்றது. அதில், முதல் பரிசான ரூ.15 மில்லியன் திரகம், தஸ்லீமாவிற்கு கிடைத்துள்ளது. இந்திய ரூபாயில் இத்தொகையின் மதிப்பு 32 கோடியாகும். இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசும் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கே கிடைத்துள்ளது.
இதனையடுத்து, 32 கோடி ரூபாயை வென்ற ஆர்யாவின் சகோதரிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.