சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள 'காப்பான்' படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று பிரமாண்டமாக நடந்தது. விழாவில் சிவகுமார், மோகன்லால், ஆர்யா, ஷங்கர், தங்கர் பச்சான், லைகா சுபாஷ்கரன், சாயிஷா, ஹாரிஷ் ஜெயராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். அப்போது விழாவில் சாயிஷா குறித்து ஆர்யா பேசியபோது.... ''நான் காதலிக்கிறேன் என நான் சயிஷாவிடம் கூட சொல்லவில்லை. இதற்குமுன் நான் பலமுறை பெண்களிடம் நேரடியாக காதலை சொல்ல, அது தவறாக போயிருக்கிறது. அதனால் அவரது அம்மாவிடம் தான் என் விருப்பத்தை முதலில் சொன்னேன்" என்றார். நடிகர் ஆர்யா மற்றும் சயிஷா திருமணம் கடந்த மார்ச் மாதம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு சாயிஷா நடிப்பில் வெளியாகும் முதல் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
'நான் சாயிஷாவிடம் ஐ லவ் யு சொல்லவே இல்லை. ஏன் தெரியுமா..? - ஆர்யா
Advertisment