aathi partner

Advertisment

நடிகர் ஆதிக்கும், நடிகை நிக்கி கல்ராணிக்கும் நிச்சயதார்த்தம்சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. தற்போது ஆதி நடிக்கும் அடுத்த படத்திற்கு 'பாட்னர்' என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தில் ஹன்சிகா, பாண்டியராஜன், யோகி பாபு, ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அறிமுக இயக்குநர் மனோஜ் தாமோதரன் இயக்குகிறார். சந்தோஷ் தயாநிதி இசையமைக்கிறார். நடிகர் ஆர்யா இப்படத்தினுடைய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனுடன் படக்குழுவிற்கு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

கலர்புல்லாக வந்திருக்கும் 'பாட்னர்' பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஆதி, ஹன்சிகா, யோகி பாபு ஆகியோர் பாண்டியராஜனை காரில் கடத்தி வைத்திருப்பது போல காட்சி அமைந்துள்ளது. சமூக வலைதளங்களில் 'பாட்னர்' பட போஸ்டருக்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.