'கேப்டன்' படத்தைத்தொடர்ந்து முத்தையா இயக்கும் ஒரு பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார் ஆர்யா. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் ட்ரம்ஸ்டிக்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் சித்தி இட்னானி கதாநாயகியாக நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படம் ஆர்யாவின் 34வது படமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்று முடிந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு முழுவீச்சில் கோவில்பட்டியில் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் 'ஆர்யா 34' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' எனத்தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் போஸ்டரில் ரஜினி நடித்த 'பாட்ஷா' படத்தின் கதாபாத்திரம் இடம்பெற்றுள்ளது. படத்தின் தலைப்பையும் போஸ்டரையும் வைத்துப்பார்க்கையில்இப்படத்தில் ஆர்யா ரஜினி ரசிகராக நடிப்பதுபோல் தெரிகிறது. ஆர்யாநாளை (11.12.2022) தனது பிறந்தநாளை கொண்டாடவுள்ள நிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் இப்போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.