Advertisment

முத்தையா இயக்கத்தில் ஆர்யா... - வேலையை தொடங்கிய படக்குழு

arya Muthaiah movie shoot starts today

ஆர்யா, கடைசியாக கேப்டன் படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தையே பெற்றது. இதனையடுத்து முத்தையா இயக்கத்தில் ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் ட்ரம்ஸ்டிக்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படத்தில் ஆர்யா நடிக்கிறார். ஆர்யாவின் 34வது படமாக உருவாகும் இப்படத்தில் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த சித்தி இட்னானி கதாநாயகியாக நடிக்கிறார். இசை பணிகளை ஜி.வி பிரகாஷ் குமார் மேற்கொள்கிறார்.

Advertisment

இந்நிலையில் 'ஆர்யா 34' படத்தின் பூஜை நேற்று நடைபெற்ற நிலையில் இன்று படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இதனை இயக்குநர் முத்தையா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்து ஒரு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் படக்குழுவினர் நேற்று நடந்த பூஜை வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவை ஆர்யா ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

Actor Arya Arya 34 muthaiya
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe