Advertisment

“கோபம் வரும்போதெல்லாம் வேஷ்டியைக் கழற்றி வீச வேண்டும்” - ஆர்யா கலகல பேச்சு

 Arya latest speech

காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பல்வேறு திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

Advertisment

நிகழ்வில் நடிகர் ஆர்யா பேசியதாவது, “இந்த விழாவின் நாயகன் ஜி.வி.பிரகாஷ். பல்வேறு பணிகளில் ஈடுபட்டு எப்போதும் அவர் பிசியாகவே இருக்கிறார். எப்போது சாப்பிடுகிறார், எப்போது தூங்குகிறார் என்பதே தெரியவில்லை. அவருடைய வளர்ச்சியைப் பார்த்து நான் மகிழ்ச்சியடைகிறேன். ஒரு நடிகராக, இசையமைப்பாளராக அவர் ஒவ்வொரு படத்திலும் வளர்ந்து வருகிறார். எனக்கு அவரோடு நீண்ட கால நட்பு இருக்கிறது. இந்தப் படத்தில் நடனம் ஆடியே ஆக வேண்டும் என்கிற அளவுக்கான இசையை அமைத்துவிட்டார். ஷோபி மாஸ்டரும் என்னை பெண்டு எடுத்துவிட்டார். ஒரு நடிகராக எனக்கே இந்தப் படம் ஒரு புது அனுபவமாக இருந்தது.

Advertisment

அனைத்து சண்டைக் காட்சிகளிலும் வேஷ்டியைக் கழற்றி வீசச் சொன்னார்கள். கோபம் வரும்போதெல்லாம் வேஷ்டியைக் கழற்றி வீச வேண்டும் என்றனர். இயக்குநர் முத்தையா என்னை ரசித்து ரசித்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார். முத்தையா சாருக்குள் ஒரு நடிகரும் இருக்கிறார். நிச்சயமாக அவரும் நடிக்க வரலாம். இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் எங்களுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தனர். குறுகிய காலத்தில் ஷூட் செய்யப்பட்ட இந்தப் படம் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நடந்தது. இந்தப் படத்தில் பணியாற்றிய யாருக்கும் எந்த ஈகோவும் கிடையாது. நிச்சயம் இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை அடையும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

Actor Arya
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe