(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
சமீபத்தில் லண்டனில் பூஜையுடன் ஆரம்பித்த கே.வி.ஆனந்த்தின் புதிய படத்தில் நடிகர் சூர்யா தற்போது நடித்து வருகிறார். சாயிஷா நாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது நடிகர் ஆர்யாவும் இதில் இணைந்துள்ளதாக இயக்குநர் கே.வி.ஆனந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சமீபத்தில் 'எங்க வீட்டு மாப்பிளை' நிகழ்ச்சி மூலம் பரபரப்பை ஏற்படுத்திய ஆர்யா சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படும் இப்படத்தில் மோகன் லால், அல்லு சிரிஷ், சமுத்திரக்கனி, பொம்மன் இரானி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படம் பயணம் சம்பந்தப்பட்ட கதையாக உருவாகும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.