மகாமுனி வெற்றியை தொடர்ந்து சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் டெடி படத்தில் நடித்து முடித்திருக்கிறார் நடிகர் ஆர்யா. இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில் ரிலீஸுக்கான பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

Advertisment

ARYA

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இதனையடுத்து சுந்தர்.சி யின் அரண்மனை-3 படத்தில் ஆர்யா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அடுத்த மாதம் இந்த படத்தின் ஷூட்டிங் வேலைகள் தொடங்கிவிடும் என்று தகவல் பரவியது.

இந்நிலையில் ஆர்யாவின் 30வது படத்தை பா.ரஞ்சித் இயக்க இருக்கிறார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ஆர்யா. காலா படத்தை தொடர்ந்து பாலிவுட் படத்தை ரஞ்சித் இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால், சில காரணங்களால் அந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படாமலே இருக்கிறது.

Advertisment

இந்நிலையில் ஆர்யாவை வைத்து பா.ரஞ்சித் இயக்க திட்டமிட்டிருக்கும் இதில் பாக்ஸிங்கை கதைகளாமக அமைத்திருக்கிறார். இப்படம் குறித்து பேசியுள்ள ஆர்யா, என்னுடைய திரை வாழ்க்கையில் சவால் நிறைந்த படமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.