Advertisment

எழுதப்படாத 5-வது நிலை; ஏலியன்ஸ் பற்றி பேசும் ஆர்யா

arya captain movie trailer released

Advertisment

'எனிமி' படத்தைத் தொடர்ந்து தற்போது சக்தி சௌந்தர்ராஜன் இயக்கும் 'கேப்டன்' படத்தில் நடித்து வருகிறார் ஆர்யா. 'திங்க் ஸ்டுடியோஸ்' மற்றும் ஆர்யாவின் 'தி ஷோ பீப்பிள்' நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்ற நிலையில் இரண்டாவது பாடல் சில தினங்களுக்கு முன்பு வெளியானது.

இந்நிலையில் 'கேப்டன்' படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இந்திய ராணுவத்தில் வேலை செய்யும் ஆர்யா தனது டீமுடன் சில காரணத்திற்காக 50 வருடமாக மனித நடமாட்டம் இல்லாத ஒரு காட்டு பகுதிக்கு செல்கின்றனர். அங்கே வாழும் ஏலியன்ஸிற்கும் ஆர்யாவின் டீமுக்கும் நடக்கும் நிகழ்வுகளை ஆக்ஷன் கலந்து சொல்லியிருப்பது போல் வெளியாகியுள்ளது இந்த ட்ரைலர். இப்படம் வருகிற செப்டம்பர் 8-ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Actor Arya captain movie
இதையும் படியுங்கள்
Subscribe