'அரிமா நம்பி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஆனந்த் ஷங்கர். இந்தப் படத்தை தொடர்ந்து விக்ரமை வைத்து 'இருமுகன்' என்னும் படத்தை இயக்கினார். இது மாபெரும் வெற்றியடைந்தது.
இதன்பின் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை வைத்து நோட்டா என்ற படத்தை இயக்கினார். இந்தப் படம் பெரிதாக வெற்றிபெறவில்லை. இந்நிலையில் இந்த இயக்குனரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விஷால் மற்றும ஆர்யா இருவரும் இவருடைய படத்தில் நடிப்பதற்காக நேரம் ஒதுக்கியுள்ளனர். விஷால் மற்றும் ஆர்யா இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே, முன்னதாக, 'அவன் இவன்', 'வாசுவும் சரவணனு'ம்ஒன்னா படிச்சவங்க போன்ற படங்களில்இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.
விரைவில்,இப்படத்திற்கானபணிகள் படப் பூஜையுடன் சென்னையில் ஆரம்பமாக இருக்கிறது. மேலும், இந்தப் படத்தில் மிருணாளினி ஹீரோயினாக நடிக்கிறார்.
வினோத் தயாரிக்கவுள்ள இந்தப் படத்துக்கு தமன் இசையமைக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் படமாக்க முடிவு செய்துள்ளது படக்குழு. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.